எமது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் அபிவிருத்தி உத்தியோகத்தரின் ஏற்பாட்டில் 30.09.2025 இலவச சட்ட உதவி தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறியானது மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டுதலுக்கு அமைய கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர் திரு.M கோமளேஸ்வரன் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

இப்பயிற்சி நெறிக்கு வளவாளராக சட்டத்தரணி திரு. சப்றின் அவர்கள் கலந்து கொண்டதோடு தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு.கோ.சிறிதரன், சமூதாய சீர்திருத்த உத்தியோகத்தர், போதைப்பொருள் முற்தடுப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர் மற்றும் எமது பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள், மாதர் சங்க உறுப்பினர்கள், சக வாழ்வு சங்க உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.














