எமது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் வடகீழ் பருவகால காலநிலைக்கு தயார்படுத்தல் தொடர்பான கலந்துரையாடலானது 24.10.2025 அன்று பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.



இக் கலந்துரையாடலில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிருவாக உத்தியோகத்தர், மண்முனை மேற்கு பிரதேச சபை உபதவிசாளர், தேசிய அனர்த்த நிவாரண சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர், பொதுச் சுகாதார பரிசோதகர், விவசாய போதனாசிரியர்கள், பெரும்பாக உத்தியோகத்தர்கள், கால்நடை வைத்திய அதிகாரி, நாவற்காடு பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி, வீதி அபிவிருத்தி திணைக்கள உத்தியோகத்தர்கள், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகத்தர்கள், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர்கள், தேசிய நீர்வளங்கள் அதிகார சபை உத்தியோகத்தர், பலநோக்கு கூட்டுறவுச் சங்க உத்தியோகத்தர்கள், கிராம சேவை உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள்(AU Lanka, RDPO) மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.



இக் கலந்துரையாடலில் வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலையினால் ஏற்படும் வெள்ள அனர்த்ததின் போது மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட மக்களின் பாதிப்பின் தன்மையினை குறைப்பதற்கு தயார்படுத்தல் தொடர்பான விடயங்கள் கலந்தாலோசிக்கப்பட்டு அதற்காக அவசர நிலையின் போது எவ்வாறு தயார் நிலையில் இருத்தல் வேண்டும் என ஆராயப்பட்டதோடு வெள்ள அனர்த்ததின் போது பாதிக்கப்படும் வீதிகள், வடிகான்கள், கல்வெட்டுக்கள், பாலங்கள் பற்றியும் கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.















