மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் வழிகாட்டலின் கீழ் முதியோர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில் மண்முனை மேற்கு பிரதேச செயலக சமூக சேவைப் பிரிவின் ஏற்பாட்டில் 14.11.2025 அன்று விளாவட்டவான் திருவள்ளுவர் முதியோர் சங்க அங்கத்தவர்கள் ஆன்மீக சுற்றுலாவை மேற்கொண்டிருந்தனர்.



இச் சுற்றுலாவில் 50 முதியவர்கள் கலந்து கொண்டு களுதாவளை பிள்ளையார் ஆலயம், காரைதீவு கண்ணகி அம்மன் ஆலயம், திருக்கோவில் முருகன் ஆலயம் மற்றும் உகந்தை முருகன் ஆலயங்களை பக்தியுடன் தரிசித்து ஆன்மீக சுற்றலாவை நிறைவு செய்தனர்.















