சீரற்ற காலநிலை காரணமாக, தித்வா புயலின் தாக்கத்தினால்  நாட்டில் ஏற்பட்ட பேரழிவில் அதிகமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நோக்கில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் நிவாரண பொருட்கள் சேகரிக்கும் பணி 05.12.2025 முன்னெடுக்கப்பட்டது.

மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பொதுமக்கள், நலன்விரும்பிகள், கிராம அபிவிருத்திச்சங்கங்கள், விளையாட்டு கழகங்கள், ஆலயங்கள் மற்றும் பொது அமைப்புகளினால்  உலருணவு பொருட்கள் சேகரிக்கப்பட்டு குறித்த அமைப்புக்களின் பிரதிநிதிகளால் பிரதேச செயலகத்தில் கையளிக்கப்பட்டு பிரதேச செயலக உத்தியோகத்தர்களினால் பொருட்கள் தரம் பிரிக்கப்பட்டு  பொதி செய்யப்பட்டு பாதிக்கப்பட்ட உறவுகளுக்கு உதவும் நோக்கில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு கையளிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1765251747042

FB IMG 1765251749185

FB IMG 1765251751216

FB IMG 1765251752607

FB IMG 1765251755352

FB IMG 1765251756757

FB IMG 1765251758862

FB IMG 1765251760920

FB IMG 1765251762993

FB IMG 1765251765082

FB IMG 1765251768541

FB IMG 1765251770830

FB IMG 1765251773241

FB IMG 1765251775412

Scroll To Top