மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் சமூக உளவள சீர்திருத்தம் தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வானது இன்று 23.01.2026 பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது. இவ்விழிப்புணர்வு செயலமர்விற்கு உளவியல் வைத்தியர் திரு K அருள்ஜோதி, வவுணதீவு சுகாதார வைத்திய அதிகாரி, மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், வலயக் கல்வி அலுவலக உத்தியோகத்தர், RDPO நிறுவன இணைப்பாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் சமூக மட்ட அமைப்புகளின் அங்கத்தவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.FB IMG 1769398846293

FB IMG 1769398848640

FB IMG 1769398851255

மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில் சமூக ரீதியாக காணப்படும் இளவயது திருமணம், தற்கொலை முயற்சிகள், சட்டவிரோத மதுபானப் பாவனை மற்றும் விற்பனை போன்ற பிரச்சினைகள் காரணமாக சமூகத்தில் ஏற்படும் உளவளச் சிக்கல்கள் தொடர்பிலும், அவற்றைக் குறைப்பதற்கான நடைமுறை நடவடிக்கைகள் குறித்தும் சமூக மட்ட அமைப்புகளின் அங்கத்தவர்களுக்கு தெளிவுபடுத்தும் நோக்கில் இவ் விழிப்புணர்வு செயலமர்வு ஏற்பாடு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கதாகும்.FB IMG 1769398852928

FB IMG 1769398858378

FB IMG 1769398862313

Scroll To Top