மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் விஷேட பிரதேச ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் 25.02.2026 பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் ஒழுங்கமைப்பில், பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்பு குழுத் தலைவருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையிலும், கைத்தொழில் மற்றும் தொழில் முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சரும் மாவட்ட அபிவிருத்தி தலைவருமான சுனில் ஹந்துன்நெத்தி அவர்களின் பங்கேற்புடனும் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இக் கூட்டத்தில் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், இளையதம்பி ஸ்ரீநாத்,  இராசமாணிக்கம் சாணக்யன் அத்துடன் மண்முனை மேற்கு பிரதேச சபை தவிசாளர், கணக்காளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், திணைக்கள பிரதிநிதிகள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

FB IMG 1772509348689

FB IMG 1772509343812

FB IMG 1772509353188

பிரதேச செயலாளர் அவர்களால் மண்முனை மேற்கு பிரதேசம் தொடர்பான விளக்க உரையுடன் கூட்டம் ஆரம்பமானது. தொடர்ந்து, பிரதி திட்டமிடல் பணிப்பாளர் அவர்களால் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தி நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தல் வழங்கப்பட்டது.

FB IMG 1772509360215

FB IMG 1772509364281

கூட்டத்தில் விவாதிக்கப்பட்ட முக்கிய அம்சங்கள்: பிரதேசத்தில் அதிகரித்து வரும்  காட்டு யானை மனித மோதல் தொடர்பாக ஆராயப்பட்டதோடு அவற்றைத் தடுப்பதற்கான தீர்வுகளும் ஆராயப்பட்டது. அறுவடை செய்யப்பட்ட நெற்களை சிறப்பாக சந்தைப்படுத்துவதற்காகவும், களஞ்சியப்படுத்துவதற்காகவும் நெற்களை உலர்த்துவதற்கு தேவையான நெல் உலர்த்திகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. பிரதேசத்தில் சேதமடைந்துள்ள பாலங்கள் மற்றும் அவசரத் தேவையாக அமைக்கப்பட வேண்டிய பாலங்கள் தொடர்பாக விசேட கவனம் செலுத்தப்பட்டது.
இவ்விடயங்கள் தவிர எமது பிரதேசத்தின் அபிவிருத்தி தொடர்பாக பல விடயங்கள்
ஆராயப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

FB IMG 1772509372561

FB IMG 1772509369046

FB IMG 1772509381009

FB IMG 1772509384170

Scroll To Top