மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட காஞ்சிரங்குடா கிராம உத்தியோகத்தர் பிரிவில் "தேசத்தை கட்டியெழுப்புகின்ற வளமான கிராமம்” எனும் நோக்கத்துடன் சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம திட்டத்தின் அங்குரார்ப்பண வைபவம் 16.03.2026 பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் நடைபெற்றதுFB IMG 1773718652917

FB IMG 1773718656795

FB IMG 1773718665487

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் அவர்கள் நிகழ்த்திய உரையைத் தொடர்ந்து, உற்பத்தி திறன் அபிவிருத்தி உத்தியோகத்தரால் அடையாளம் காணப்பட்ட சமூக உற்பத்தி திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால அபிவிருத்தி செயற்பாடுகளை உள்ளடக்கிய அறிக்கை, பிரதேச செயலாளர் மற்றும் கிளீன் ஸ்ரீலங்கா திட்ட பிரதேச இணைப்பாளர் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.FB IMG 1773718666794

FB IMG 1773718668196

FB IMG 1773718670484

மேலும் இந்நிகழ்வில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் கௌரவ தவிசாளர் #திரு_த_கோபாலப்பிள்ளை, கிளீன் ஸ்ரீலங்கா திட்ட பிரதேச இணைப்பாளர், கௌரவ பிரதேச சபை உறுப்பினர்கள், திட்ட ஒருங்கிணைப்பு அபிவிருத்தி உத்தியோகத்தர்களான திரு R.பிரசாத், திரு K.ஜெயானந்தம்,கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், சமூக உற்பத்தி திறன் மாதிரி கிராம உறுப்பினர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் நலன்விரும்பிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.

இந்த திட்டம் கிராம மக்களின் உற்பத்தித் திறனை உயர்த்தி, நிலையான அபிவிருத்தியையும் வளமான கிராம சமூகத்தையும் உருவாக்கும் முக்கியமான முன்னெடுப்பாக அமைந்துள்ளது.

Scroll To Top