கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய பிரதேச மட்ட கண்காட்சி 2026.04.23 வவுணதீவு மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலையத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வு கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. ஞா. ஜெயக்காந் அவர்களின் தலைமையில் வவுணதீவு மாதர் அபிவிருத்தி சங்க தையல் போதனாசிரியர் மற்றும் மாணவர்களால் இக்கண்காட்சி முன்னெடுக்கப்பட்டது.




பிரதம_அதிதி - பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம், கௌரவ_அதிதிகள் - உதவிப் பிரதேச செயலாளர் திருமதி ல. பிரசாந்தன், மாவட்ட மாதர் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் திரு. பா. கோகுலராஜன்
சிறப்பு_அதிதிகள்- பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி தனுஜா செல்வராஜா, கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் திரு. மு. கோமளேஸ்வரன்.

இந்த கண்காட்சியில் மாதர் அபிவிருத்தி பயிற்சி நிலைய பயிற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட கைவினைப் பொருட்கள், தையல் உற்பத்திகள், வீட்டு தொழில் சார்ந்த தயாரிப்புகள் மற்றும் புதுமையான பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டன.
மேலும், மாதர் கிராம அபிவிருத்தி சங்க சிறுதொழில் முயற்சியாளர்களால் தயாரிக்கப்பட்ட பல்வேறு உணவுப் பொருட்களும் பார்வைக்கு வைக்கப்பட்டிருந்தன. பங்கேற்ற அனைவரும் பெண்களின் திறமைகள், படைப்பாற்றல் மற்றும் தொழில்முனைவுத் திறனை உயர்ந்த முறையில் பாராட்டினர்.
இந்நிகழ்வு பெண்களின் சமூக-பொருளாதார முன்னேற்றத்திற்கு ஒரு வலுவான தளமாகவும், சுயதொழில் வாய்ப்புகளை ஊக்குவிக்கும் சிறந்த முயற்சியாகவும் விளங்கியது.















