தேசிய சுற்றாடல் தினம் மற்றும் தேசிய டெங்கு ஒழிப்பு வாரம் ஆகியவற்றை முன்னிட்டு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், மண்முனை மேற்கு பிரதேச சபை மற்றும் வவுணதீவு பொதுச் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகம் ஆகியவற்றின் இணைப்பில் விசேட சிரமதானப் பணிகள் இன்று 26.06.2026 வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டன.


இதன் பிரதான நிகழ்வு வவுணதீவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் நடைபெற்றதுடன், மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஏனைய கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் ஒரே நேரத்தில் சுற்றுச்சூழல் சுத்திகரிப்பு மற்றும் டெங்கு ஒழிப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மண்முனை மேற்கு பிரதேச சபை செயலாளர், சிரேஸ்ட பொதுச் சுகாதார வைத்திய பரிசோதகர், வவுணதீவு பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக மற்றும் பிரதேச சபை உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் உற்சாகமாகக் கலந்துகொண்டனர்.













