நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சின் கீழ் அரச கருமமொழி வாரத்தை முன்னிட்டு, மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில் இளைஞர், யுவதிகளுக்கான அரச கருமமொழியின் பயன்பாடு தொடர்பான விழிப்புணர்வு பயிற்சி நெறி 09.07.2026 பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.


இந்நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், பிரதி திட்டமிடல் பணிப்பாளர் திருமதி S தனுஜா அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
பயிற்சி நெறியில் வளவாளர்களாக மாவட்ட செயலக உத்தியோகத்தர்களான திரு. புவிராஜ் மற்றும் திரு. சந்திரகுமார் ஆகியோர் கலந்து கொண்டு, அரச கருமமொழியின் பயன்பாடு, அதன் முக்கியத்துவம் மற்றும் பொதுமக்களுக்கான சேவைகளை இருமொழித் திறனுடன் வழங்குவதன் அவசியம் குறித்து பயனுள்ள விளக்கங்களை வழங்கினர்.
இந்நிகழ்வில் தேசிய ஒருமைப்பாட்டு உத்தியோகத்தர் திரு. கோ. சிறிதரன் அவர்களும், மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட இளைஞர், யுவதிகள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டு பயிற்சியின் பயனைப் பெற்றனர்.















