கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் மூன்றாம் நாள் நிகழ்ச்சித்திட்டம், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் வழிகாட்டலில் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஆயித்தியமலை வடக்கு கிராம உத்தியோகத்தர் பிரிவில் அமைந்துள்ள நெல்லூர் கலியுகவரத வாசுகி அம்மன் ஆலயத்தில் 29.07.2026 வெற்றிகரமாக நடைபெற்றது.
இந்நிகழ்வின் மூலம் அறநெறி பாடசாலை மாணவர்கள் மற்றும் கிராம அபிவிருத்தி சங்க அங்கத்தவர்களுக்கு நேர்மைக் கலாசாரம் – கிளீன் ஸ்ரீலங்கா தேசிய வேலைத்திட்டத்தின் நேர்மை வாரம் தொடர்பான விழிப்புணர்வு வழங்கப்பட்டது. சமூகத்தில் நேர்மை, ஒழுக்கம், பொறுப்புணர்வு மற்றும் நல்லாட்சிப் பண்புகளை வளர்த்தெடுக்கும் நோக்குடன் பல பயனுள்ள கருத்துகள் பகிரப்பட்டன.
இந்நிகழ்வில் கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார உத்தியோகத்தர், இந்துக் கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர், கலாசார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்தனர்.
















