கிளீன் ஶ்ரீ லங்கா தேசிய வேலைத்திட்டத்தின் கீழ், இலங்கை இராணுவத்தின் யோசனைக்கமையவும் அதன் முழுமையான ஆதரவுடனும், தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி என்ற கருப்பொருளில், அத்தம தேசிய தூய்மை தின வேலைத்திட்டம்  08.08.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட பன்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவில் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.

FB IMG 1786337331368
 
 
20260810 110813
20260810 110849
 
 
அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள் என்ற உயரிய இலக்கை அடைவதை நோக்கமாகக் கொண்டு, தன்னார்வ சமூக பங்களிப்புடன் நடைபெற்ற இம்மாபெரும் சிரமதான நிகழ்வு, மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
FB IMG 1786337375071
 
FB IMG 1786337497819
 
FB IMG 1786337801392
 
இந்நிகழ்வில் பிரதம விருந்தினராக கௌரவ பாராளுமன்ற உறுப்பினரும் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவருமான திரு.K பிரபு அவர்கள் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்.

சிறப்பு விருந்தினர்களாக:
- அரசாங்க அதிபரும் மாவட்ட செயலாளருமான திரு.J.S.அருள்ராஜ் அவர்கள்
- மேஜர் ஜெனரல்  திரு K. A. D. C. R. கன்னங்கரா அவர்கள்
- சிரேஷ்ட பொலிஸ்மா அதிபர் திரு.L.லீலாரெத்ன அவர்கள்
- மண்முனை மேற்கு பிரதேச சபை கௌரவ தவிசாளர் திரு.த.கோபாலப்பிள்ளை அவர்கள்
- வவுணதீவு சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர் Dr.S.இளங்கோ அவர்கள்
ஆகியோர் கலந்துகொண்டு நிகழ்வை மேலும் சிறப்பித்தனர்.

மேலும், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், கிராம உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர், சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை மேற்கு பிரதேச சபை ஊழியர்கள், சமூக மட்ட அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் பன்சேனை கிராம பொதுமக்கள் எனப் பலரும் உற்சாகமாக பங்கேற்று தன்னார்வ சேவையில் ஈடுபட்டனர்.

சிறப்பு அம்சமாக, மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் சிரமதான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டமை, தூய்மையானதும் பொறுப்புணர்வுமிக்க சமூகத்தை உருவாக்கும் எமது கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.
 
FB IMG 1786337804775
 
FB IMG 1786337818163
Scroll To Top