“நேர்மைக்கலாசாரம் க்ளீன் ஸ்ரீலங்கா” தேசிய செயற்றிட்டத்தின் கீழ், நேர்மையானதும் வெளிப்படைத்தன்மை மிக்கதுமான அரச சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், புவிநிலை இடங்காட்டல் முறைமை (GPS) அடிப்படையில் உத்தியோகத்தர்கள் தமது கடமைப் பிரிவுகளில் அல்லது அலுவலகத்தில் தரித்திருந்து பொதுமக்களுக்கு சேவை வழங்குவதனைப் பதிவு செய்யும் புதிய முறைமை 17.08.2026 காலை 8.00 மணியளவில் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில்  பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.FB IMG 1787027229547

FB IMG 1787027232560

FB IMG 1787027235338

இம்முறைமையானது அரச உத்தியோகத்தர்களின் கடமை நேர ஒழுங்கை வலுப்படுத்துவதுடன், பொறுப்புக்கூறல், வெளிப்படைத்தன்மை மற்றும் நேர்மையான அரச சேவை வழங்கலை மேலும் உறுதிப்படுத்தும் முக்கியமான முன்னெடுப்பாக அமைகின்றது.

இந்நிகழ்வில் கணக்காளர், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் பலரும் கலந்து கொண்டு, இம்முறைமையின் நடைமுறைப்படுத்தலில் தமது ஒத்துழைப்பை வழங்கினர்.

FB IMG 1787027240798

FB IMG 1787027244792

FB IMG 1787027249688

Scroll To Top