மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவுக்கான இரண்டாம் காலாண்டுக்கான பிரதேச ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் பிரதேச செயலாளர் ந.சத்தியானந்தி அவர்களின் ஏற்பாட்டில் 25.06.2025, கேட்போர் கூடத்தில் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுத் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கந்தசாமி பிரபு அவர்களின் தலைமையில் நடைபெற்றது.




இக்கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களான ஞா .ஶ்ரீநேசன் அவர்களும் இ .சிறிநாத் அவர்களும் பிரதேச தவிசாளர் த.கோபாலப்பிள்ளை, பிரதி தவிசாளர் த.டிசாந் பிரதேச சபை உறுப்பினர்களும்கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.




மேலும் பிரதேச செயலக உதவிப் பிரதேச செயலாளர் ,பிரதித் திட்டமிடல் பணிப்பாளர், கணக்காளர் , மற்றும் ஏனைய பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் உட்பட பிரதேசத்தின் சகல திணைக்களங்களின் தலைவர்களும் அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.














