

இந்நிகழ்வில் பதவி நிலை உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டதுடன் ஐஸ்வர்யம் யோகா இன்சிற்ரியூட் பொறுப்பாளர் எஸ் . ஸ்ரீதரன் மற்றும் மட்டக்களப்பு மேற்கு கல்வி வலயத்தின் ஆசிரிய ஆலோசகரும் ஐஸ்வர்யம் யோகா கலை மன்றத்தின் பொறுப்பாளருமான அ. ஜெயகரன் மற்றும் யோகா பயிற்றுவிப்பாளர் மு.கமலேந்திரன் ஆகியோர் வளவாளர்களாக கலந்து கொண்டு உத்தியோகத்தர்களுக்கு யோகா பற்றிய விழிப்புணர் வினையும் பயிற்சியினையும் வழங்கி வைத்தனர்.




இந்த விழாவின் போது, IUYF International Yoga Federation ஏற்பாட்டில் நடைபெற்ற யோகா போட்டிகளில் வெற்றி பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர் மிதுளா கமலேந்திரன் மற்றும் கிராம சேவை உத்தியோகத்தர் நிலானி ரமேஷ் ஆகியோருக்கு வெற்றி பதக்கம் அணிவிக்கப்பட்டு வெற்றிச் சான்றிதழ் வழங்கிக் கௌரவிக்கப் பட்டனர்.
















