எமது மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தினால் 15.10.2025 மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களினால் விவசாய பிரிவினால் தெரிவு செய்யப்பட்ட 357 பயனாளிகளுக்கு கௌப்பி, நிலக்கடலை மற்றும் கமுகு கன்றுகள் என்பன பகிர்ந்தளிக்கப்பட்டது.

FB IMG 1761035154533   FB IMG 1761035156899   

FB IMG 1761035159832    FB IMG 1761035161624 

கமத்தொழில் அமைச்சினால் 750Kg நிறையுடைய கௌப்பி 262  பயனாளிகளுக்கும், 600Kg நிறையுடைய நிலக்கடலை 60 பயனாளிகளுக்கும் மற்றும் ஏற்றுமதி விவசாய திணைக்களத்தினால் 35 பயனாளிகளுக்கு 2600 கமுகு கன்றுகளும் வழங்கப்பட்டது.

FB IMG 1761035163823        FB IMG 1761035165673

FB IMG 1761035168013         FB IMG 1761035170424

மேலும் விவசாயிகளுக்கான நிலக்கடலை செய்முறை பற்றியும் கமுகு கன்றுகளின் நடுகை முறை பற்றியும் ஏற்றுமதி விவசாயம் மற்றும் கமத்தொழில் உத்தியோகத்தர்களால் பூரண விளக்கமளிக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.


Scroll To Top