"உலகை வழிநடாத்த அன்பால் போஷியுங்கள்" எனும் தொனிப்பொருளில் கொண்டாடப்படும் சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு மண்முனை மேற்கு வவுணதீவு பிரதேச செயலக சிறுவர் மற்றும் மகளிர் பிரிவும் சமுர்த்தி பிரிவும் இணைந்து ஏற்பாடு செய்த நிகழ்வானது நெல்லூர் பொது விளையாட்டு மைதானத்தில் 18.10.2025 இடம்பெற்றது.




இந் நிகழ்வு மதிப்பிற்குரிய பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் ஆரம்பமானதுடன் இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர், சமுர்த்தி முகாமையாளர், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள்,பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், கிராம உத்தியோகத்தர்கள்,சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச செயலக ஏனைய உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவன உத்தியோகத்தர்கள், கிராம மட்ட அமைப்புகள் , மாணவர்கள், மற்றும் பெற்றோர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.




மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பமான இந் நிகழ்வில் மாணவிகளினால் தேவாரம் இசைக்கப்பட்டு வரவேற்பு நடனம், பேச்சு , நடனம்,எல்லே சுற்றுப்போட்டியுடன் சிறுவர்களை மகிழ்விக்கக்கூடிய பல வினோத விளையாட்டுக்கள் எனப் பலதரப்பட்ட நிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிபிடத்தக்கது.



இதன் போது நிகழ்வில் பங்குபற்றிய மாணவ மாணவிகளுக்கு பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.













