கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களமும் மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் இணைந்து நடாத்திய கலை விழா நிகழ்வானது 2025.11.05 அன்று கன்னன்குடா மகா வித்தியாலய கண்ணகி கலை அரங்கில் பிரதேச செயலாளர் திருமதி.நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் மாலை 5.30 மணிக்கு ஆரம்பமாகி நடைபெற்றது.



இந் நிகழ்வில் பிரதேச செயலக கலாசார உத்தியோகத்தர்கள், கிராம மட்ட ஆலயங்கள் மற்றும் சமூக நல அமைப்புக்களின் நிருவாகிகள், கலைஞர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




இந்நிகழ்வில் கன்னன்குடா கண்ணகி முத்தமிழ் மன்றம், மண்டபத்தடி கலைமகள் கலைக்கழகம், ஈச்சந்தீவு பாரதி கலைமன்றம் போன்ற கலைக்கழகங்களால் நடனம்,கரகம்,கூத்து போன்ற பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.













