எதிர்காலத்தில் ஏற்படக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள El-Niño காலநிலை நிகழ்வினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை முன்கூட்டியே அடையாளம் கண்டு, அவற்றை குறைப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை வலுப்படுத்தும் நோக்கில் விழிப்புணர்வு கூட்டமொன்று 24.08.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வு மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.



El Niño தொடர்பான காலநிலை மாற்றங்கள், அதன் சாத்தியமான தாக்கங்கள் மற்றும் அவற்றை எதிர்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பான தெளிவூட்டலை கிழக்கு பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட விரிவுரையாளர் திரு R கிருபைராஜா அவர்கள் வழங்கினார்.
இவ்விழிப்புணர்வு நிகழ்வில் பிரதி திட்டமிடல் பணிப்பாளர், சிரேஷ்ட பொதுச்சுகாதார பரிசோதகர், கால்நடை வைத்திய அதிகாரி, விவசாய அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாய போதனாசிரியர்கள், மண்முனை மேற்கு பிரதேச சபையின் உபதவிசாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள், அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்கள், ஏனைய அலுவலக உத்தியோகத்தர்கள், கமநல அமைப்புக்களின் பிரதிநிதிகள்,கிராம அபிவிருத்தி சங்கங்களின் பிரதிநிதிகள் மற்றும் சமூக மட்ட பிரதிநிதிகள் என பல்வேறு துறைகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர்.
















