மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவில், 2026/2027 ஆம் ஆண்டுக்கான பெரும்போக செய்கை ஆரம்பக் கூட்டம், மேலதிக அரசாங்க அதிபர் திருமதி S. சுதர்சினி தலைமையில் மற்றும் பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் ஒழுங்கமைப்பில், கடந்த செப்டம்பர் 18, 2026 அன்று பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்வில் நீர்ப்பாசனம், உரச் செய்கை, விதை அபிவேத்தி மற்றும் காப்புறுதித் திணைக்களங்களின் உயர் அதிகாரிகள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் மற்றும் விவசாயிகள் பலரும் கலந்துகொண்டனர்.

இக்கூட்டத்தில் நீர்ப்பாசனம் மூலம் 14,128 ஏக்கரும், மானாவாரி மூலம் 22,201.5 ஏக்கரும் என மொத்தமாக 36,329.5 ஏக்கர் பரப்பளவில் பெரும்போக செய்கையை மேற்கொள்ள திட்டமிடப்பட்டது. மேலும், நீர்ப்பாசனத் திட்டங்கள், மானிய உரம் வழங்கும் பொறிமுறை, நிலுவையிலுள்ள காப்புறுதி நட்டஈடுகள், கரடியனாறு திட்டம், மேட்டு நிலப் பயிர்ச்செய்கைக்கான நீர் வழங்கல் மற்றும் விவசாயிகளுக்கான வங்கிக் கடன் வசதிகள் போன்ற முக்கிய விடயங்கள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டன.














