பருவகால காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய அனர்த்தங்களை எதிர்கொள்வதற்கான முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பான முக்கிய கலந்துரையாடல் 23.09.2026 அன்று மண்முனை மேற்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.

20260924 092956
 
இக்கலந்துரையாடலில் மண்முனை மேற்கு பிரதேச சபையின் செயலாளர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர், சிரேஷ்ட வைத்திய பரிசோதகர், புதுமண்டபத்தடி கிராமிய வைத்தியசாலை வைத்தியர், இலங்கை மின்சார சபை பொறியியலாளர், மாகாண நீர்ப்பாசன திணைக்கள பொறியியலாளர், கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர், தேசிய அனர்த்த சேவை அபிவிருத்தி உத்தியோகத்தர், கடற்படை அதிகாரி, கிராம உத்தியோகத்தர்கள், சமூக வலுவூட்டல் உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைசார் உத்தியோகத்தர்கள் மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
 
 
20260924 093020
 
20260924 093050
பருவகால காலநிலை மாற்றங்களினால் ஏற்படக்கூடிய வெள்ளம், வரட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களுக்கான முன்னாயத்த நடவடிக்கைகள் ,அவசரநிலை முகாமைத்துவம் மற்றும் பாதிப்புகளை குறைப்பதற்கான ஒருங்கிணைந்த செயற்பாடுகள் தொடர்பாக இக்கலந்துரையாடலில் விரிவாக ஆராயப்பட்டது.

குறிப்பாக, El Niño தாக்கத்தினால் ஏற்படக்கூடிய காலநிலை மாற்றங்களின் விளைவாக உருவாகக்கூடிய வெள்ளம் மற்றும் வரட்சி போன்ற அனர்த்தங்களினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக்கொள்வதற்கான முன்னெச்சரிக்கை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் ,வளங்களை ஒருங்கிணைத்தல், துறைசார் நிறுவனங்களுக்கிடையிலான ஒத்துழைப்பு மற்றும் அவசரகால செயற்பாடுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பாக கலந்தாலோசிக்கப்பட்டன.
Scroll To Top