மண்முனை மேற்கு பிரதேச செயலக நலன்புரி சங்கத்தின் 2026ஆம் ஆண்டிற்கான ஆண்டுறுதி நிகழ்வும், 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளில் இடமாற்றம் பெற்று வேறு பணியிடங்களுக்குச் சென்ற உத்தியோகத்தர்களை கௌரவிக்கும் பிரியாவிடை நிகழ்வு 03.10.2026 உன்னிச்சை மைனா பாம் வளாகத்தில் சிறப்பாக நடைபெற்றது.


இந்நிகழ்வில், மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் தமது கடமைகளை அர்ப்பணிப்புடனும் பொறுப்புடனும் நிறைவேற்றி, இடமாற்றம் பெற்று வேறு பணியிடங்களுக்குச் சென்ற 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளின் உத்தியோகத்தர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந்நிகழ்வில் பிரதேச செயலாளர், கணக்காளர், இடமாற்றம் பெற்று சென்ற பிரதித் திட்டமிடல் பணிப்பாளர் திரு.செ சபேஸ், நிர்வாக உத்தியோகத்தர், கிராம உத்தியோகத்தர்களுக்கான நிர்வாக உத்தியோகத்தர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளைச் சேர்ந்த உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.


இடமாற்றம் பெற்று சென்ற உத்தியோகத்தர்களின் சேவையைப் பாராட்டி, அவர்களின் எதிர்காலப் பணிப்பயணம் சிறப்பாக அமைய வாழ்த்துக்களும் தெரிவிக்கப்பட்டன.
ஒற்றுமை, நட்பு, சேவை உணர்வு மற்றும் சகோதரத்துவத்தை மேலும் வலுப்படுத்தும் வகையில் இடம்பெற்ற இந்நிகழ்வு, அனைத்து உத்தியோகத்தர்களுக்குமான மதிய உணவு விருந்துடன் இனிதே நிறைவுற்றது.
















