மண்முனை மேற்கு பிரதேச செயலகமும் பிரதேச முதியோர் சம்மேளனமும் இணைந்து ஏற்பாடு செய்த 2026 ஆம் ஆண்டிற்கான முதியோர் தின விழா 13.10.2026  மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

FB IMG 1792387709797

20261019 110232

முதியோர்களின் நலன், மகிழ்ச்சி மற்றும் சமூகப் பங்களிப்பை மதித்து, அவர்களுக்கான அன்பையும் மரியாதையையும் வெளிப்படுத்தும் நோக்கில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது.

இந்நிகழ்வில் முதியோர்களை மகிழ்விக்கும் வகையில் பல்வேறு கலைநிகழ்வுகளும், சுவாரஸ்யமான விளையாட்டுப் போட்டிகளும் இடம்பெற்றதுடன், போட்டிகளில் பங்குபற்றி வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசில்களும் வழங்கப்பட்டன.

இந்நிகழ்வில் பிரதேச செயலக கணக்காளர், சமூக சேவை உத்தியோகத்தர், அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், பிரதேச முதியோர் சம்மேளன நிர்வாகத்தினர் மற்றும் பிரதேசத்தைச் சேர்ந்த முதியோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டு விழாவைச் சிறப்பித்தனர்.

20261019 110345

20261019 110414

20261019 110443

20261019 110502

Scroll To Top