மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் வழிகாட்டலில், முதியோரின் ஆரோக்கியத்தைப் பேணிப் பாதுகாத்து, அவர்களின் நலவாழ்வை மேம்படுத்தும் நோக்கில் நடமாடும் மருத்துவ முகாம் 16.10.2026 இலுப்படிச்சேனை – வாழைக்காலை கிராம உத்தியோகத்தர் அலுவலகத்தில் நடைபெற்றது.
இம்மருத்துவ முகாமில் முதியோர்களின் நலனைக் கருத்திற்கொண்டு இலவச மூக்குக் கண்ணாடிகள் வழங்கப்பட்டதுடன், ஆயுர்வேத மருத்துவ சிகிச்சைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் 250 இற்கும் மேற்பட்ட முதியோர்களும் பொதுமக்களும் கலந்துகொண்டு மருத்துவ சேவைகளைப் பெற்றுக்கொண்டனர்.முதியோரின் உடல்நலத்தைப் பாதுகாத்து, அவர்களுக்குத் தேவையான மருத்துவ சேவைகளை இலகுவாகப் பெற்றுக்கொடுக்கும் இத்தகைய நலன்புரிச் செயற்பாடுகள் சமூகத்தின் ஆரோக்கியமான வாழ்விற்கும் முதியோரின் நல்வாழ்விற்கும் பெரும் பங்களிப்பை வழங்குகின்றன.












