மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் ஏற்பாட்டில், பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் தலைமையில் வாணி விழா 2026 நிகழ்வு 19.10.2026 பிரதேச செயலகத்தில் சிறப்பாக நடைபெற்றது. 

கல்வி, கலை, அறிவு மற்றும் ஞானத்தின் தெய்வமாகிய சரஸ்வதி தேவியை வழிபட்டு, அவரது அருளைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்நிகழ்வில், பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பங்குபற்றி விழாவைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்வின் சிறப்பம்சமாக, தேசிய ஆக்கத்திறன் போட்டியில் மாவட்ட மட்டம் மற்றும் மாகாண மட்டத்தில் வெற்றியீட்டிய மாணவர்களுக்குப் பரிசில்கள் வழங்கிக் கௌரவிக்கப்பட்டதோடு உதவியற்ற இருபது மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ்விழா உத்தியோகத்தர்களிடையே ஒற்றுமை, நல்லிணக்கம் மற்றும் கலை கலாசாரப் பாரம்பரியங்களைப் பேணிப் பாதுகாக்கும் உணர்வை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது.













