மண்முனை மேற்கு பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட விவசாய பெரும்போக செய்கைக்கான ஆரம்ப கூட்டமானது 23.09.2025 மேலதிக அரசாங்க அதிபர் திருமதி.S.சுதர்சினி அம்மணி அவர்களின் தலைமையில் பிரதேச செயலாளர் திருமதி.சத்தியானந்தி நமசிவாயம் அம்மணி அவர்களின் ஒழுங்கமைப்பின் கீழ் பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்திற்கு பணிப்பாளர்(நீர்ப்பாசண திணைக்களம் - மத்தி), பிரதிப் பணிப்பாளர் (நீர்ப்பாசண திணைக்களம் - மாகாணம்), பிரதிப் பணிப்பாளர் (விவசாய திணைக்களம் - விரிவாக்கம்), பிரதிப் பணிப்பாளர் - (தேசிய உரச் செயலகம்-மட்டக்களப்பு), பிரதிப் பணிப்பாளர் (விதை மற்றும் நடுகைப் பொருள் அபிவிருத்தி நிலையம்), உதவிப்பணிப்பாளர் (விவசாய கமநல காப்புறுதி சபை), தவிசாளர் (பிரதேச சபை - வவுணதீவு), கால்நடை வைத்திய அதிகாரிகள், பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்கள், திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாயிகளும் கலந்து கொண்டனர்.



இக்கலந்துரையாடலில் பெரும்போகத்தில் நீர்ப்பாசணம் மூலம் 14113 ஏக்கர்களும் மானாவாரி மூலம் 22127 ஏக்கர்களும் மொத்தமாக 36240 ஏக்கர்கள் செய்கை பண்ணப்படவுள்ளதாக திட்டமிடப்பட்டதுடன் கீழ் குறிப்பிடப்படும் பல விடயங்கள் தொடர்பாகவும் விளக்கமளிக்கப்பட்டது.
1. மத்திய மற்றும் மாகாண நீர்ப்பாசண திணைக்களத்தினால் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டங்கள் பற்றி விளக்கமளிக்கப்பட்டது.
2. மானிய உரம் வழங்கல் மற்றும் அதற்கான பொறிமுறை பற்றி விவசாயிகளுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
3. பராசூட் முறை, லேசர் லெவலிங் போன்ற நவீன நெற்செய்கை தொழிநுட்பங்கள் பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
4. விநியோகத்திற்கு தயாராக உள்ள விதைகள் மற்றும் புதிய நெல்லினங்களின் பயன்பாடு பற்றி தெளிவுபடுத்தப்பட்டது.
5. காப்புறுதிச் செயற்பாடு, அதற்கு விண்ணப்பிக்கும் புதிய நடைமுறைகள் பற்றி கூறப்பட்டது.
6. வங்கிகள் தங்களால் வழங்கப்படும் கடன் வசதிகள் மற்றும் விவசாயிகளுக்கான விசேட கடன் திட்டங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.















