க்ளீன் ஸ்ரீ லங்கா (Clean Sri Lanka) திட்டத்தின் கீழும், இலங்கை இராணுவத்தின் ஆலோசனையின் படியும், அத்தம தேசியத் தூய்மை தினம் ("தூய்மையான நாட்டிற்கான தேசிய மக்கள் பணி") கடந்த செப்டம்பர் 19, 2026 அன்று வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டது.


மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி சத்தியானந்தி நமசிவாயம் அவர்களின் தலைமையில் நடைபெற்ற இச்சிரமதான நிகழ்வில், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள், இராணுவ மற்றும் விசேட அதிரடிப்படைப் படையினர், சுகாதாரத் துறை அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர். பாவற்கொடிச்சேனை கிராம உத்தியோகத்தர் பிரிவிற்குட்பட்ட கண்ணகி நகர் மயானத்தில் இதன் முதன்மைக் களம் அமைக்கப்பட்டிருந்ததுடன், "அழகான நாடு – புன்னகைக்கும் மக்கள்" என்ற இலக்கை நனவாக்கும் வகையில் மண்முனை மேற்கு பிரதேசத்தின் அனைத்து கிராமங்களிலும் ஒரே நேரத்தில் இச்சிரமதானப் பணிகள் முன்னெடுக்கப்பட்டமை இதன் சிறப்பம்சமாகும்.














