முதியோர் தேசிய செயலகத்தின் நிதி அனுசரணையில், மண்முனை மேற்கு பிரதேச செயலாளர் திருமதி நமசிவாயம் சத்தியானந்தி அம்மணி அவர்களின் வழிகாட்டுதலின் கீழ், முதியோருக்கான டிஜிட்டல் எழுத்தறிவு நிகழ்ச்சித்திட்டம் 06.10.2026 மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தின் பிரதான மண்டபத்தில் சிறப்பாக நடைபெற்றது.
இந்நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம், முதியோர்களை நவீன டிஜிட்டல் உலகத்துடன் இணைத்தல் அவர்களின் ஓய்வு நேரத்தை பயனுள்ள வகையில் பயன்படுத்துதல் மற்றும் தாங்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை டிஜிட்டல் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி எவ்வாறு சந்தைப்படுத்துவது என்பது தொடர்பில் நடைமுறை சார்ந்த தெளிவூட்டல்கள் வழங்கப்பட்டன.



மேலும், தற்போதைய டிஜிட்டல் உலகில் காணப்படும் பல்வேறு வாய்ப்புகளைப் பயன்படுத்தி, முதியோர் தங்களது அன்றாட வாழ்க்கையை மேலும் பயனுள்ளதாகவும் மகிழ்ச்சிகரமாகவும் அமைத்துக்கொள்வது தொடர்பிலும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வளவாளர்களாக திரு. வினோத் (Trainer & Facilitator), திரு. க. பிரதீஸ்வரன்(Vcot) மற்றும் செல்வன் இ. சங்கீத் ஆகியோர் கலந்துகொண்டு, முதியோருக்கு தேவையான பயிற்சிகளையும் விளக்கங்களையும் வழங்கினர்.


அத்துடன், சமூக சேவை உத்தியோகத்தர், மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் மற்றும் மண்முனை மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட முதியோர் உள்ளிட்ட பலரும் இந்நிகழ்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.














